லண்டன் எக்ஸ்பிரஸ் – Review by பிறைமுடி

                   நாடக விமர்சணம்     அனுப்புநர் பிறைமுடி

தமிழன் தன் உடைமைகளைத் தன் கைகளிலும் தன் கலை, கலாச்சாரங்களை நெஞ்சங்களில் சுமந்து தான், கடலைக் கடந்து சென்ற இடங்களில் எல்லாம் தங்களது முத்திரைகளைப் பதித்து இருக்கிறார்கள். இது காலம் காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

 

கடலைக் கடந்து அலை அலையாக கடற்கரை நகர் சியாட.டல் குடி பெயர்ந்த தமிழ் மக்களும் இந்தப் பாரம்பரியத்திற்கு விலக்கல்ல. சியாட்டலில் இவர்கள் வளர்த்த அமைப்புகளில் இண்டஸ் கிரியெஷனும் ஒன்று.

 

இவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக, ஆண்டுக்கு ஒரு தரமான நாடகம் அரங்கேற்றுகிறார்கள். இந்தக் குழுவில் கணிப்பொறி நிபுணர்களும், அவர் களைச் சார்ந்த கல்லூரி மாணவர்களும், பால் மனம் மாறாத பள்ளிச் சிறுவர்களும் அடங்கி இருப்பது பெருமைக்கு உரியது.

 

இந்த ஆண்டு பெல்வியு மேடென்பாயர் கலை அரங்கில் ஜூன் 7ந் தேதி 2009-06-07 அவர்களின் நான்காம் ஆண்டு நாடகமாக லண்டன் எக்ஸ்பிரஸ் அரங்கேற்றபட்டது. இது நான் தொடர்ந்து பார்த்த 3-வது நாடகமாகும்.

 

அரங்க நிர்மாணம் ஜோடனைகளில் எப்பொழுதும் இண்டஸ் கிரியேஷன் முத்திரை பதிக்கும். லண்டன் எக்ஸ்பிரஸில் மகுடம் சூட்டி இருக்கிறார்கள்

 

கதை கச்சிதம், இயல்பான வசனம், அளவான பின்னிசை.

 

இவற்றை முற்றும் வீட்டுக்குள்ளே வளர்த்த இயற்கைப் பயிர் என்றார்கள் (Home Grown Organic Produce) . நிச்சயம் பெருமைபட்டுக் கொள்ளலாம்.

 

பாத்திரங்களின் படைப்பை மில்லி லிட்ட்ரால் அளந்து பாத்திரங்களுக்கு ஏற்றவாறு பங்கீடு செய்து இருக்கிறார்கள். அனைவருமே தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நானோ மீட்டர் சுத்தமாக நடித்து இருக்கிறார்கள்.

தொடருங்கள் தோழர்களே! (Keep it up Folks!).

சில நினைவில் நிற்கும் பாத்திரங்கள் –

ரம்யா ஸ்ரீராம் – பழக்கப்பட்ட பண்பட்ட நடிப்பு மாமி

மந்திரி தணிகாசலம் – நெல்லைத் தமிழ் கொஞ்சி விளையாடியது. மந்திரியின்

அல்டாப்புக்கு ஒரு ஓகோ!

மரகதவல்லி சமேத ஷங்கரநாரயணன் சுப்பிரமணியன் ( அய்யரை விட்டு விட்டீர்களே!) ஜோடி – ஜாடிக்கேத்த மூடி.பாத்திரங்களில் இவர்கள் ஒன்றிக்கொண்டார்களா!அல்லது பாத்திரங்கள் இவர்களைப் பற்றிக்கொண்டதா?

 

ஷாலினி (அனன்யா) நல்ல நடிப்பு. தன் காதல் தோல்வியை சொல்லும் போது சிறந்த நடிகையின் ஸ்தானத்தை எட்டிப் பிடித்து விட்டார். ஜெட் வேக வளர்ச்சி.

அர்ஜுனை அடுத்த முறை சந்திக்கும் போது நாயுடு என்று தான் கூப்பிடுவேன் பலமான மிகவும் பலமான ராம்.

 

மற்றவற்றை பட்டியலில் பார்த்தேன். எல்லாமே கூட்டு முயற்சி(Team Effort). வெற்றிக்குக் காரணம் இதுதானோ? (Keep it up Indus!). இதில் தனித்து நிற்பவர்கள் மனோஜ் சிவகுமாரும் திகா சேகரும் தான்

 

விமான தள நிர்மாணம் ஜோடனைக் குழு மயனிடம் பயிற்சி பெற்று வந்தார்களா?

இயற்கையான அளவான ஒப்பனை. அந்தக் குழுவிற்கு ஒரு ஷொட்டு!

 

அடுத்து வருவது கொட்டு !

திரை மசலா பாணி டிஷும் டிஷும் தேவையா?  மொழி, அபியும் நானும் சக்கை போடு போடும் இந்தக் காலத்தில்.

 

ஒலி ஒளி எல்லா நாடகங்களிலும் ஏற்படும் தொல்லை. முக்கிய காரணம் மற்றவற்றை ஒத்திகை பார்பது போல இவற்றை ஒத்திகை பார்க்க அரங்க வசதியோ நேரமோ கிடைப்பதில்லை.இந்த சவாலை சமாளிக்க நாடகத்துறையில் ஈடுபட்டு இருக்கும் கணினி நிபுணர்கள் முன் வரவேண்டும்

Advertisements

%d bloggers like this: